Monday, April 26, 2010

'சடசட'வென மரங்கள் மண்ணில் சரிகையில் கதறல் கேட்கலையோ?


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் ரோடுகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது. கோவை நகரில் பல முக் கிய ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இப்பணிக்காக, அவசியமில்லாத இடங்களிலும் ஏராளமான பசுமை மரங்கள் தினமும் வெட்டிச்சாய்க்கப்படுகின்றன.

கோவை - அவினாசி ரோடு, திருச்சி ரோடு, கோவை விமான நிலைய ரோடு என ஏற்கனவே பல இடங்களில் ஆயிரக் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அப்பகுதிகளில் நிழல் மாயமாகி அனல் பறக்கிறது. அடுத்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் 800 மரங்கள் வெட்டப்படவுள்ளன. உண்மையில், இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரோட்டை அகலப்படுத்த தேவையான இடம் பற்றி, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்; அவர்களே இதற்கான இடத்தை அளந்து கொடுக்கின்றனர். அப்போது, அந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதி தர வேண்டியதும் வருவாய் துறையினரின் பொறுப்புதான். மரங்களின் வயது, தரம், பயன்பாட்டை பொருத்து அதற்குரிய ஏலத்தொகையை வனத்துறை நிர்ணயிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளில் மட்டுமே, இந்த நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளில் பலவிதமான அத்துமீறல்கள் நடக்கின்றன. வருவாய்த்துறையிடம் பெற்ற அனுமதிக்கு மாறாக அதிக மரங்களை வெட்டவும், மிகவும் குறைவான விலைக்கு மரங்களை ஏலம் விடவும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதிப்பதாக புகார் கிளம்பியுள்ளது. மரத்தின் மதிப்பு குறைவு என்பது கூட, பெரிய பிரச்னையாக கருதப்படவில்லை.ஆனால், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பச்சை மரங்களை வெட்டிச்சாய்ப்பதே, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், செம்மொழி மாநாடு மேம்பாட்டு பணிகளின் மீதே பலருக்கும் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

மரங்களை அவசியமின்றி வெட்டுவதை தடுக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சிக்கும்போது மரக்கொலை புரிவோரும், வருவாய்த்துறையினரும் கை கோர்த்துக்கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மிரட்டுவதும் நடக்கிறது. சமீபத்தில், பச்சை ஆலமரத்தை அனுமதியின்றி வெட்டியதை கோவை 'ஓசை' அமைப்பினர் தடுத்துள்ளனர். அப்போது, அவர்களை தாக்க முயற்சி நடந்ததுடன், கோவை வருவாய் கோட்டாட்சியர் மிரட்டும் தொணியிலும் பேசியுள்ளார். இதேபோன்று, சுற்றுச்சூழல் அமைப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உதாசீனப்படுத்தி வருகின்றன.இதனால், மரம் வெட்டுவதற்கு எதிராக பொது மக்களே நேரடியாக களம் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.

சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டில் பாலசுப்ரமணியம் மில் லைன் அருகே, அவசியமின்றி மரம் வெட்டியதை அந்த பகுதி மக்களே தடுத்துள்ளனர். ஆனால், நேற்றும் மரம் வெட்டும் அத்து மீறல் தொடர்ந்தது. பங்கஜா மில் ரோட்டில், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பல மரங்கள் நேற்று வெட்டி வீழ்த்தப்பட்டன. இதை கண்டித்து, பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து மரங்களுக்கு பால் ஊற்றி ஒப்பாரி வைத்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினர். நொய்யல் பசுமைக்கழகம், சமத்துவ முன்னணி, மாற்றம் அறக்கட்டளை, ராக் அமைப்பு, பாரம்பரியம், திருக்குறள் மாமன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், வெட்டப்பட்ட மரக்கிளைகளை எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று போராட்டம் நடத்தி மனுக் கொடுத்தனர். பொதுமக்களும், சுற்றுச்சூழல் அமைப்பினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினாலும், கோவையிலுள்ள அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி சிறிதும் அக்கறைப்படுவதே இல்லை.

இவ்வாறு மரங்களை வெட்டுவதே நகரில் வெப்பம் அதிகரிக்கக்காரணம் என்பதை உணர்வதுமில்லை. ஏனெனில் அதிகாரிகள் யாரும் ரோட்டில் நடந்தோ, டூ வீலரிலோ செல்வதில்லை. 'ஏசி'வசதி கொண்ட கார்களில்தான் பயணிக்கின்றனர். அவசியமின்றி மரங்களை வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நன்றி தினமலர்.....



எங்கள் வளங்களை அழித்து ....உலக தமிழ் மாநாடா ????
ஐயோ....ஐயோ....இந்த அரசியல்வாதிகளுக்கு இதுலும் ஆதாயம் தேட ,பணம் சம்பாரிக்க ஆசை ...... வெக்க கேடு .....

Tuesday, March 23, 2010

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: இந்தியாவில் முதல் முறை: 33,000 மாணவர்கள் பயன்



கோவை : இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது இந்த நூதன திட்டம்.



மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். பெற்றோர் அதிகாலையில் கூலி வேலைக்கு சென்று விடுவதால், பல குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வருவது, மாநகராட்சிக் கல்விக் குழுவின் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் ஊட்டச்சத்து உணவியல் துறையிடம், இது தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாநகராட்சி கேட்டுக் கொண்டது. ஆய்வு பணிக்காக, ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல்கலை அளித்த அறிக்கையில், பெரும்பாலான மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் காலை வேளையில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், நடைமுறைக்கு வந்தால், 85 மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 33 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடையும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இத்திட்டம், மாநகராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



மாநகராட்சிக் கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம், இது பற்றி கூறுகையில், ''ஆறு மாதங்களாக இதுபற்றி ஆய்வு நடத்தி வந்தோம். ஆய்வில் மாணவர்களின் உடல் சார்ந்த சில குறைகள் கண்டறியப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், 33,000 மாணவர்களுக்கு தினமும் உணவு சமைக்க வேண்டும் என்பதால், எந்தவித சுகாதார சீர்கேடுகளும் நேராதவாறு கவனமாக நிறைவேற்ற வேண்டிய திட்டமாக உள்ளது. திட்டத்துக்கு அனுமதி கிடைத்தவுடன், அனைத்து கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பாக நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்வோம். வரும் கல்வியாண்டு முதல் நிறைவேற்றப்படும். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் உடல் நலம் மேம்படும் என்பதால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்; மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயரும்,'' என்றார்.

---------

Tuesday, August 25, 2009

சிறந்த தமிழ் சாப்ட்வேருக்கு ரூ. 1 லட்சம் பரிசு-அரசு அறிவிப்பு

சென்னை: தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறந்த தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப்படும் பரிசுக்குரிய விண்ணப்ப தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கணினி யுகத்தில் அதற்கேற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும், தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்து அதனை உருவாக்கியவருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகையாக ரூ.1,00,000 மும், அந்த நிறுவனத்திற்குப் பாராட்டு சான்றிதழையும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.

2009 - 10 ம் ஆண்டிற்கான பரிசுக்குரிய விண்ணப்பங்கள் 14.8.2009-க்குள் வந்து சேர வேண்டு என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு 15.9.2009 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழ் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட மென் பொருளாக இருத்தல் வேண்டும். மென்பொருள் கடந்த மூன்றாண்டுக் காலத்திற்குள் (2006, 2007, 2008) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மென்பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சி என்றால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள, பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

இந்த தொகை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிடையாக பணமாகவும் செலுத்தலாம். அல்லது கேட்பு வரைவோலையாக - The Director of Tamil Development (I/C), Chennai - என்ற பெயரில் அனுப்பி வைக்கலாம்.

விதி முறைகள் அடங்கிய விண்ணப்பங்கள் வரும் 15.9. 2009 - ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் தகவல் அறிய, தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொ), தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரியில் கடிதம் மூலமும் , 044-28190412, 28190413 என்ற தொலை பேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.


------------------------------------------------நன்றி Thatstamil.com-----------------------

Monday, March 9, 2009

நான் இவன் இல்லை ..........

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

 


“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

 

 

 


ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி

 

 

 

 


பாவம்.. அவனுக்கு 
‘சா’வே வரல!

 

 

 

Wednesday, December 31, 2008

பை-பாஸ் சாலைக்கு ரூ. 558 கோடி ஒதுக்கீடு



கோவை : சூலூர்-மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்க, ரூ. 558 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கியிருப்பதால், விரைவில் பணிகள் துவங்கவுள்ளது. கோவை வழியாகச் செல்லும் சேலம் - கொச்சி (என்.எச்., 47), நாகை-கூடலூர் (என்.எச்., 67) ஆகிய இரு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. திண்டுக்கல்-சத்தியமங்கலம் ரோடு (என்.எச்., 209) மட்டுமே, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை ரோடுகளை விட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோடுகள் மிக மோசமாக இருப்பதால், கோவை மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, என்.எச்., 67 நெடுஞ்சாலையில் திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டின் நிலை படு மோசமாக இருந்தது.

இதனால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, பல போராட்டங்களும் நடந்துள்ளன. சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் இது பற்றி தொடர்ந்து புகார்கள் குவிந்தன. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், தற்காலிக சீரமைப்புப் பணி மேற்கொள்வதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி கூறினர். இருப்பினும், வழக்கம் போல வேலை நடக்காது என்றே பொது மக்கள் தரப்பில் பேச்சு எழுந்தது. ஆனால், கலெக்டர் பழனிகுமாரின் தொடர் நடவடிக்கையால், இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

கோவை சிந்தாமணிப் புதூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான 52 கி.மீ., தூரத்துக்கு "பேட்ச் ஒர்க்' மற்றும் தார் ரோடு அமைக்க, 2 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், கோவை - திருச்சி ரோட்டில் ஸ்டாக் எக்சேஞ்ச் பகுதியிலிருந்து ஒண்டிப்புதூர் வரையிலும் இருந்த ஆபத்தான குழிகள் மூடப்பட்டுள்ளன. அதே போன்று, துடியலூர் வரையிலுமான ரோட்டிலும் ஆங்காங்கே இந்த "பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகர பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கும், வடகோவை சிந்தாமணியிலிருந்து சாய்பாபா கோவில் வரையிலுமான 4 கி.மீ., தூரத்துக்கும் "பேட்ச் ஒர்க்' செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இவற்றைத் தவிர்த்து, மொத்தம் 12 கி.மீ., தூரத்துக்கு முற்றிலுமாக ரோடு முழுவதும் தார்ச்சாலை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் நடந்து வந்த விபத்துக்கள் குறையுமென்று ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணியும் விரைவில் துவங்குமென்று ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதற்கு முன், சூலூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான பை-பாஸ் ரோடு பணி துவங்கி விடுமென்று தெரிகிறது. இதற்காக 558 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பை-பாஸ் ரோடுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால், விரைவில் "டெண்டர்' விடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூலூரிலிருந்து நீலம்பூர் வழியாக நரசிம்மநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில், தலா 2 கி.மீ., தூரம் கடந்து செல்லும் வகையில் இந்த பை-பாஸ் ரோடு அமைக்கப்படவுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறுகையில், ""மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும், நிதியும் கிடைத்து விட்டதால், சூலூர் - மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்கும் பணி மிக விரைவில் துவங்கப்படும்,'' என்றார். நீண்ட காலமாக, ஆமை வேகத்தில் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென சுறுசுறுப்படைந்துள்ளது.
-------------நன்றி தினமலர் ---01/01/2009---------------------

Monday, December 22, 2008

நகைச்சுவை குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி மக்களே!


ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆக
றதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ்
போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல
'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள்
பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு
பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.


பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு
, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.


ரிஷப ராசி மக்களே!


நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி
சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும்
உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா,
நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான
சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில
இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.


பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது
நல்லது.


மிதுன ராசி மக்களே!


எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த
குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது.
குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து
தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக்
கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு
சவுண்டை' அனுப்பி வைக்கும்.


பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்
.


கடக ராசி மக்களே!


சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும்
ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும்
அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது.
ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை
குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
போறீங்க, கவனம்.


பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால,
உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!
முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!


சிம்ம ராசி மக்களே!


குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால,
இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது.
'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது.
ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல
பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து
!


பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை
சாத்தறது உத்தமம்.


கன்னி ராசி மக்களே!


ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில
நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி
வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா
பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி
நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட'
காக்கா வந்து கொத்திரும்.


பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு
தானம் பண்ணனும்.


துலாம் ராசி மக்களே!


கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க
வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும்
நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது.
மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால
அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல
சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!


பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே
சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.


விருச்சிக ராசி மக்களே!


யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க
கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!


பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.


தனுசு ராசி மக்களே!


நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற
எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ
நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி
நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப்
போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு
வித்துருங்க.


பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.


மகர ராசி மக்களே!


வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும்
7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது.
பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம்
டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.


பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!


கும்ப ராசி மக்களே!


இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம்.
அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு
கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட
படிக்கக்கூடாது.


பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார்
பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி மக்களே!


குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு
டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது
அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.
கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக
மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.


பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க