Wednesday, December 31, 2008

பை-பாஸ் சாலைக்கு ரூ. 558 கோடி ஒதுக்கீடு



கோவை : சூலூர்-மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்க, ரூ. 558 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கியிருப்பதால், விரைவில் பணிகள் துவங்கவுள்ளது. கோவை வழியாகச் செல்லும் சேலம் - கொச்சி (என்.எச்., 47), நாகை-கூடலூர் (என்.எச்., 67) ஆகிய இரு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. திண்டுக்கல்-சத்தியமங்கலம் ரோடு (என்.எச்., 209) மட்டுமே, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை ரோடுகளை விட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோடுகள் மிக மோசமாக இருப்பதால், கோவை மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, என்.எச்., 67 நெடுஞ்சாலையில் திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டின் நிலை படு மோசமாக இருந்தது.

இதனால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, பல போராட்டங்களும் நடந்துள்ளன. சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் இது பற்றி தொடர்ந்து புகார்கள் குவிந்தன. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், தற்காலிக சீரமைப்புப் பணி மேற்கொள்வதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி கூறினர். இருப்பினும், வழக்கம் போல வேலை நடக்காது என்றே பொது மக்கள் தரப்பில் பேச்சு எழுந்தது. ஆனால், கலெக்டர் பழனிகுமாரின் தொடர் நடவடிக்கையால், இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

கோவை சிந்தாமணிப் புதூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான 52 கி.மீ., தூரத்துக்கு "பேட்ச் ஒர்க்' மற்றும் தார் ரோடு அமைக்க, 2 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், கோவை - திருச்சி ரோட்டில் ஸ்டாக் எக்சேஞ்ச் பகுதியிலிருந்து ஒண்டிப்புதூர் வரையிலும் இருந்த ஆபத்தான குழிகள் மூடப்பட்டுள்ளன. அதே போன்று, துடியலூர் வரையிலுமான ரோட்டிலும் ஆங்காங்கே இந்த "பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகர பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கும், வடகோவை சிந்தாமணியிலிருந்து சாய்பாபா கோவில் வரையிலுமான 4 கி.மீ., தூரத்துக்கும் "பேட்ச் ஒர்க்' செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இவற்றைத் தவிர்த்து, மொத்தம் 12 கி.மீ., தூரத்துக்கு முற்றிலுமாக ரோடு முழுவதும் தார்ச்சாலை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் நடந்து வந்த விபத்துக்கள் குறையுமென்று ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணியும் விரைவில் துவங்குமென்று ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதற்கு முன், சூலூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான பை-பாஸ் ரோடு பணி துவங்கி விடுமென்று தெரிகிறது. இதற்காக 558 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பை-பாஸ் ரோடுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால், விரைவில் "டெண்டர்' விடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூலூரிலிருந்து நீலம்பூர் வழியாக நரசிம்மநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில், தலா 2 கி.மீ., தூரம் கடந்து செல்லும் வகையில் இந்த பை-பாஸ் ரோடு அமைக்கப்படவுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறுகையில், ""மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும், நிதியும் கிடைத்து விட்டதால், சூலூர் - மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்கும் பணி மிக விரைவில் துவங்கப்படும்,'' என்றார். நீண்ட காலமாக, ஆமை வேகத்தில் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென சுறுசுறுப்படைந்துள்ளது.
-------------நன்றி தினமலர் ---01/01/2009---------------------

Monday, December 22, 2008

நகைச்சுவை குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி மக்களே!


ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆக
றதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ்
போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல
'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள்
பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு
பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.


பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு
, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.


ரிஷப ராசி மக்களே!


நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி
சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும்
உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா,
நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான
சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில
இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.


பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது
நல்லது.


மிதுன ராசி மக்களே!


எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த
குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது.
குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து
தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக்
கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு
சவுண்டை' அனுப்பி வைக்கும்.


பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்
.


கடக ராசி மக்களே!


சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும்
ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும்
அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது.
ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை
குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
போறீங்க, கவனம்.


பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால,
உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!
முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!


சிம்ம ராசி மக்களே!


குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால,
இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது.
'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது.
ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல
பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து
!


பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை
சாத்தறது உத்தமம்.


கன்னி ராசி மக்களே!


ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில
நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி
வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா
பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி
நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட'
காக்கா வந்து கொத்திரும்.


பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு
தானம் பண்ணனும்.


துலாம் ராசி மக்களே!


கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க
வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும்
நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது.
மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால
அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல
சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!


பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே
சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.


விருச்சிக ராசி மக்களே!


யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க
கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!


பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.


தனுசு ராசி மக்களே!


நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற
எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ
நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி
நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப்
போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு
வித்துருங்க.


பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.


மகர ராசி மக்களே!


வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும்
7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது.
பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம்
டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.


பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!


கும்ப ராசி மக்களே!


இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம்.
அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு
கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட
படிக்கக்கூடாது.


பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார்
பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி மக்களே!


குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு
டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது
அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.
கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக
மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.


பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க

Thursday, December 18, 2008

கோடிகள் தேடிவரும் கோவை!

'அப்படியா..!' என்று ஆச்சரியமூட்டுவதாக இருந்தது அந்தத் தகவல்...

''இன்றைய சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சாய்ஸ் கோயம்புத்தூர்தான். பலரும் செட்டில் ஆவதற்கு ஏற்ற இடமாக இந்த ஊரைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் வாழும் மக்களிடையே நாங்கள் எடுத்த சர்வே சொல்லும் செய்தி இது! இந்திய அளவில் கோவைக்கு ஐந்தாவது இடம்... சென்னைக்கு ஒன்பதாவது இடம்தான்!'' என்றார் சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லேங்க் லசால் மெக்ராஜ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரமேஷ் நாயர்.


கோவையில் புதிய பிராஜெக்ட்டுகளில் சொத்து வாங்குபவர்கள் 15-25% என்.ஆர்.ஐ-க்களாக இருக்கிறார்கள் என்று புரமோட்டர்கள் கூறுகிறார்கள். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் கணிசமானவர்கள். இதுதவிர, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கோவையில் முதலீடு செய்கிறார்கள். சுமார் 40-50 லட்ச ரூபாயில் மதிப்பில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஃப்ளாட்டுகளையோ, அல்லது தனி வீடுகளையோ, இந்த என்.ஆர்.ஐ-க்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்டு, கோவையில் போய் இறங்கினோம். விசாரித்துப் பார்த்தால் வெளிநாட்டில் வாழ்பவர்கள் மட்டுமல்ல... வெளியூரில் வாழ்பவர்கள்கூட செட்டில் ஆவதற்கு ஏற்ற இடமாக கோவையைத்தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது கோவை ரியல் எஸ்டேட்!

''சுவையான சிறுவாணித் தண்ணீர், குளுமையான க்ளைமேட்னு கடைசி காலத்தை நிம்மதியாகக் கழிப்பதற்கு ஏத்த சூழல் இங்கே இருக்கு. அதனால், ரிட்டயர்ட் ஆனதும் இங்கே வந்திடலாம்ங்கற நோக்கத்தோடு பலர் இங்கே இடம் வாங்கறாங்க. அதேபோல ஐ.டி. துறையில் கோவைக்கு பெரிய எதிர்காலம் இருக்கு, அதனால் நல்ல முதலீடாகவும் இருக்கும் என்று கணக்குப் போட்டு முதலீட்டு நோக்கத்தில் இங்கே இடம் வாங்கறவங்களும் அதிகமாகவே இருக்காங்க...'' என்று எல்லாச் சாலைகளும் கோவையை நோக்கி வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டார் உள்ளூர்வாசி ஒருவர்.

கோவை ரியல் எஸ்டேட் பற்றி வெளியூர், வெளிநாட்டுவாசிகளுக்கு எப்படித் தெரிகிறது?

''இன்டர்நெட்தான் சார்... வீடு மனை விற்கிற தகவல்களைச் சொல்லும் இணையதளங்களில் கோவையைப் பற்றி ஸ்பெஷல் தகவல்கள் குவிஞ்சு கிடக்கு. அதைப் பார்த்துட்டு, இடத்தை செலக்ட் பண்றவங்க, தங்கள் சொந்தக்காரர்கள், நண்பர்களை அனுப்பி இடத்தைப் பார்க்கிறாங்க. ஓகேன்னா ஒரு வார லீவில் வந்து பத்திரத்தை முடிச்சுட்டுப் போயிடறாங்க... அப்படி இல்லைன்னாக்கூட புரோக்கர்கள்கிட்டே சொல்லி வெச்சா, ஒரு வாரத்தில் இடத்தை முடிச்சிடலாம்'' என்ற நம் கோவை நண்பர், அருள் என்ற புரோக்கரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

''இங்கே இருக்கிற புரோக்கர்களும் பிஸியாத்தான் இருக்காங்க. தினமும் இடங்கள் வித்துக்கிட்டும், வாங்கிக்கிட்டும்தான் இருக்காங்க. இதிலே கொடுமை என்னன்னா சில புரோக்கர்கள், மனை விற்பவர் ஐம்பது லட்சம் சொன்னா, பார்ட்டிகிட்டே பத்து லட்சம் ஏத்திச் சொல்லி வித்துக் கொடுக்கறாங்க. கமிஷனுக்கு ஆசைப்பட்டு அவங்க செய்யும் காரியத்தால் எல்லாருக்கும் கெட்ட பேரு. ஆனா, நிலத்தோட மதிப்பு ஏறிக்கிட்டே போறதால் யாரும் விலையைப் பத்தி பெருசா கவலைப்படுறதில்லை'' என்றார் அருள்.

வாங்குவதற்கு மட்டுமின்றி, தேவைப்படும்போது விற்கவும் துணை செய்வதால் யாரும் புரோக்கர்களோடு மல்லுக்கட்டுவதில்லை.

மிகச் சமீபமாக கோவையைச் சுறுசுறுப்பாக்கி இருப்பது ஐ.டி. நிறுவனங்களின் வருகைதான். 'டைடல் பார்க்' அறிவிப்பு வெளியான 2004-ல் இருந்தே கோவையை 'ஐ.டி. நகரம்' என்று சொல்லும் அளவுக்கு நிறைய திட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கு ஐ.டி. கம்பெனி தொடங்குபவர்கள் பக்கத்திலேயே ஊழியர்களுக்குக் குடியிருப்பு கட்டவும் இடங்களை வாங்குவதால் டபுள் விலைக்கு நிலங்கள் கைமாறுகின்றன. அந்த வகையில் இப்போதைக்கு ஹாட் ஏரியா சரவணம்பட்டிதான். மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்ட் மனை விலை 1-1.25 லட்ச ரூபாய் என்ற ரேஞ்சில் இருந்தது, இப்போது 2.5-3.5 லட்ச ரூபாய்! சுமார் 10-15 கி.மீ. தூரம் இருக்கும் சரவணம்பட்டி, துடியலூர், வடவள்ளி, போத்தனூர் போன்றவை கோவை நகரின் ஒரு பகுதியாகவே இப்போது மாறிவிட்டது.

இந்த விலையேற்றத்துக்குத் தூண்டுகோலாக இருக்கும் காரணங்களைப் பற்றிச் சொன்னார் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் எஸ்.எஸ்.மணி.

''சிட்டியோட உள் கட்டமைப்பை திட்டம்போட்டு தயார் பண்றாங்க... பல இடங்கள்ல சாலை நாலு வழிப் பாதையா மாறிக்கிட்டிருக்கு. அதனால் போக்குவரத்தும் நல்லா இருக்கும். சென்னை அளவுக்கு இங்கே போக்குவரத்து நெரிசல் இருக்காது. இப்போ மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை வழியாக வரும் பஸ்களை கோவை மாநகராட்சி எல்லைக்கு வெளியே நிறுத்தற வகையில் புதுசா பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கும் வேலை நடக்குது. இனி டிராஃபிக் இன்னும் ஈஸியாயிடும். மேலும் ரியல் எஸ்டேட் விலை ஏறுவதற்கு உள் கட்டமைப்பு நல்ல வளர்ச்சியுடன் திட்டமிடுவதும் முக்கிய காரணமாகும்'' என்றார்.

நகரத்தின் முக்கியமான பகுதிகளில் உள்ள தங்கள் மனைகளை விற்கும் உள்ளூர்வாசிகள், அப்படியே நகருக்கு வெளியில் உள்ள பகுதிகளை மடக்கிப் போடுகிறார்கள்.
''கோயம்புத்தூரில் இருந்தாலும் சுத்துப்பட்டு ஏரியாக்களில் இருந்தாலும் எங்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. ஏன்னா, எந்தத் தேவைக்கும் எங்களால் எளிதாக இங்கே வந்து போகமுடியும். ஆனால், இங்கே இடத்தை வித்தா, ஊருக்கு வெளியே இது மாதிரி இரண்டு மடங்கு இடம் வாங்க முடியுது. கூடவே, இப்போதைய தேவைகளுக்கும் பணம் கிடைக்குது. இது லாபம்தானே!'' என்று மனையை விற்பவர்கள் காரணங்களை எடுத்துச் சொல்கிறார்கள். இப்படி இவர்கள் புறநகர் பகுதிகளைத் தேடிச் செல்வதால் அங்கேயும் விலை ஏறிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், நகருக்குள் குடியிருப்பவர்கள் முதலீட்டு நோக்கத்தில் மனை வாங்கிப் போடுவதும் நடக்கிறது. கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பி.சிவலிங்கம்-வசந்தகுமாரி தம்பதி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கும் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தங்களின் இரு மகள்களின் எதிர்காலச் செலவை ஈடுகட்டுவதற்காக மனையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

வசந்தகுமாரி நம்மிடம், ''இங்குவேலை பார்க்கும் பலர் ரிட்டயர்மென்ட்டுக்கு பிறகும் தண்ணீர், கல்வி, மருத்துவ வசதி போன்ற காரணங்களால் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவதால், மனை முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்'' என்றார்.

நகரின் 40% பேர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்கிறார்கள். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாறும் கனவோடு இருக்கும் அவர்களில் பலரும் கொஞ்சம் புறநகராக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுமந்துகொண்டு வார விடுமுறை நாட்களில் புறநகர் பகுதிகளில் உள்ள லே அவுட்டுகளை காண்பிக்க வேன்களும் கார்களும் பறந்துகொண்டே இருக்கின்றன.

அப்படி காரில் வந்து இறங்கிய கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த பொன்சேகர், ''என் சொந்த ஊர் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கு. பத்து வருஷமா இங்கே வியாபாரம் செய்துக்கிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட இதுதான் சொந்த ஊர் போல ஆகிடுச்சு. சரி, இங்கேயே வீட்டையும் கட்டிடலாம்னு இடம் தேட ஆரம்பிச்சேன். என் பட்ஜெட்டுக்கு ஏத்த இடத்தைத் தேடித்தேடி 25 கிலோமீட்டர் தள்ளி வந்து நிக்கிறேன். ஆனால், இருக்கிற போக்குவரத்து வசதிகளைப் பார்க்கும்போது இதெல்லாம் தூரமே கிடையாது. இங்கே மனை வாங்கினா, தனி வீடாக் கட்டமுடியுமே!'' என்றார்.

தனிவீட்டு மோகம் போலவே, அபார்ட்மென்ட்களின் தேவையும் கோவையில் அதிகமாகிவிட்டது. அதனால், மொத்தமாக இடம் வைத்திருப்பவர்களுக்கு ஏக டிமாண்ட். பில்டர்களும் புரமோட்டர்களும் தேடிப்போய் அவர்களோடு அக்ரிமென்ட் போடுகிறார்கள். அதிலும் முன்பெல்லாம் இதுபோன்ற அக்ரிமென்டில் ஃப்ளாட்களை விற்பதில் கிடைக்கும் பணத்தில் பில்டர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். பில்டருக்கு 60% அளவுக்காவது வருமானம் இருந்தால்தான் அக்ரிமென்ட் போடுவார்கள். ஆனால், இன்றைக்குப் பாதிக்கு பாதி என்ற அளவுக்கு இருக்கிறது நிலைமை. தேவை அப்படி இருப்பதால் வருமானத்தில் பாதியை நிலம் தருபவருக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் பில்டர்கள்.

தேவையின் அடிப்படையில் இப்படி அக்ரிமென்ட்டுகள் போட்டாலும், கட்டுமானப் பொருட்களின் விலை கொஞ்சம் கலங்க வைப்பதாகத்தான் இருக்கிறது. அதனாலேயே இப்போது அபார்ட்மென்ட் விற்பனை கொஞ்சம் மந்தமாக இருக்கிறது.

''சிமென்ட், ஸ்டீல் விலை மற்றும் லேபர் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் கடனுக்கான வட்டியும் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த 2 வருடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ரெண்டு வருஷத்துக்கு முந்தி, குடியிருப்புத் தேவைக்கு வாங்குபவர்கள் மற்றும் முதலீடாக வாங்குபவர்கள் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாக இருந்தது. இப்போது, குடியிருப்புக்காக வாங்குபவர்கள் 80% ஆகவும், முதலீட்டாளர்கள் என்பவர்கள் 20% என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாறும்போது அபார்ட்மென்ட் விற்பனை வேகம் பிடிக்கும்'' என்றார் 'ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோஸியேஷன்'- கோவை பிரிவு துணைத் தலைவர் வி.மோகன்.

விற்பனை மந்தமாக இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார் 'ஸ்ரீவஸ்தா ரியல் எஸ்டேட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.ராமசாமி.

''நடுத்தர வருமானப் பிரிவினருக்கு 10-15 லட்ச ரூபாயில் குடியிருப்புக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த அளவுக்கு யாரும் கட்டுவதில்லை. இந்தப் பட்ஜெட்டில் வீடுகள் கட்டப்பட்டால் மளமளவென்று விற்றுவிடும்'' என்றார்.

கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுவிற்பனை விலை நன்றாகவே இருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன் ச.அடி. 1,500 ரூபாய்க்கு வாங்கியதை இப்போது 3,000 ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்க முடிகிறது. வாடகைக்கு தனி வீடு எடுப்பதை விட அபார்ட்மென்ட் பாதுகாப்பானதாக இருப்பதாக இங்குள்ளவர்கள் எண்ணுவதால், அதற்கு டிமாண்ட் உருவாகி இருக்கிறது. வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்ந்திருந்தாலும் கடனில் வீடு வாங்குவோர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது என்று வங்கி வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டில் வீட்டுக்கடன் 15-20 லட்ச ரூபாய் என்ற ரேஞ்சில் வாங்கினார்கள். இப்போது அது 30-40 லட்சமாக அதிகரித்துள்ளது.

பொதுவாக கோவையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பற்றி 'பில்டர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா-கோவை சென்ட'ரின் தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் பேசும்போது, ''ஜவுளி மற்றும் இன்ஜினீயரிங் துறைக்கு பெயர் பெற்ற கோவை, இப்போது ஐ.டி. துறையிலும் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. எல்காட், எல் அண்ட் டி, சுஸ்லான் எனர்ஜி போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சுமார் 1,200 ஏக்கர் பரப்பில் வருகிறது. இதில், 1,000 ஏக்கர் பரப்பில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஐந்து தனியார் ஐ.டி. பார்க்குகள், தாஜ் சூரியா, லீ மெரிடியன் ஓட்டல் பிராஜெக்ட்கள் இங்கு வந்திருக்கின்றன. தேவையை ஈடுசெய்யும் விதமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஒருங்கிணைந்த நகரியங்கள், ஷாப்பிங் மால்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர மாநிலங்களில் இருந்தும் பில்டர்கள், புரமோட்டர்கள் இங்கு களமிறங்கி பிரமாண்ட திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். கோவை நகரம் உயரம் மற்றும் அகல வாட்டில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றவர்,

''இங்கு புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வருவதால் அதில் பணிபுரியும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் கண்டிப்பாக வீடுகள் தேவைப்படும். அப்போது தேவை இன்னும் அதிகரிக்கும். அடுத்த 4-5 ஆண்டுகளில் சுமார் ஐம்பதாயிரம் வீடுகள் புதிதாகத் தேவைப்படும் என்று கணித்திருக்கிறோம். இங்கு தனிக் குடித்தனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புற நகர்களிலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சென்ட் 20-30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற இடத்தில், இப்போது பத்து மடங்கு விலை ஏறிவிட்டது'' என்றார்.

கோடிகளைக் கொட்ட கோவை தயாராக இருக்கிறது!




-----------
நன்றி விகடன்

Saturday, December 13, 2008

தாலாட்டு

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
யார் அடிச்சு நீ அழறே உன் அஞ்சன கண் மை கரைய
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
மாமா அடிச்சாரோ மல்லிகப்பூ செண்டாலே
தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாளோ பால் புகட்டும் கையாலே
அந்த பாட்டியா அடிச்சாளோ உன்னை பத்துவிரலாலே
யாரடிச்சு நீ அழறே கண்ணே நீ கண்ணுறங்கு
யாரடிச்ச கண்ணீரு ஆறாய் பெருகிறது
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...


---------------------------------------------

கண்ணே உறங்குறங்கு, என் கண்மணியே நீயுறங்கு
பொன்னே உறங்குறங்கு, என் பூங்கிளியே நீயுறங்கு
கண்ணை அடித்தார் யார், எந்தன் கண்மணியை தொட்டார் யார்?
பொன்னை அடித்தார் யார், என் பூங்கிளியை தொட்டார் யார்...
யாரடித்த கண்ணீரு ஆறாய் பெருகியது
எவரடித்த கண்ணீரு குளமாய் தேங்கியது
மாமன் அடித்தானோ மலர்கொண்ட செண்டாலே
மாமி அடித்தாளோ மலர் தளிர் கரத்தாலே
பாட்டி அடித்தாளோ பால் புகட்டும் சங்காலே
சித்தி அடித்தாளோ சின்னஞ் சிறு விரலாலே

Wednesday, December 10, 2008

எங்க ஊரு பாசை இதுதாங்கோ....


  1. அவியொ - அவர்கள்

  2. உங்குனாலே - உங்களாலே

  3. அட்டி - கழுத்தில் அணியும் அணி

  4. அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு

  5. அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை

  6. அதிக்களம் - ஆணவம்

  7. அல்லை - இடுப்பு

  8. எரப்பாணி - இரந்து உண்ணுபவன்

  9. எருக்காலி - பயந்து நடுங்குவன்

  10. ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம்

  11. ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம்

  12. ஒடை அடித்தல் - காயடித்தல்

  13. ஒவை - மரக்கிளையை அசைத்தல்

  14. ஓடை - மேட்டு நிலம்

  15. ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி

  16. கடக்கால் - அடித்தளம்

  17. கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம்

  18. கோயல் - கோவில்

  19. கச்சல் - குழப்பம், நைந்து விடுதல்

  20. கடையாணி - அச்சாணி

  21. கந்தர கோலம் - அலங்கோலம்

  22. கருமாந்திரம் - திட்டும் சொல்

  23. கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி

  24. குக்கல் - நாய்

  25. காந்து - வெயிலின் மிகு வெப்பம்

  26. கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு

  27. கூச்சம் - மரத்தூண்

  28. கெடாரி - மாடு

  29. கெடை - ஓரிடத்தில் அதிக நேரம் அல்லது நாட்கள் இருப்பது

  30. கொட்டமுத்து - விளக்கெண்ணெய்

  31. கொட்டு முழக்கு - மேள தாளம்

  32. சித்தை - சிறிது நேரம்

  33. சூரி - கூரிய நீண்ட மடக்குக் கத்தி

  34. சீலெ - சேலை

  35. சங்கடை - குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கு

  36. சப்படை - தட்டை வடிவம்

  37. சாமி சாட்டு - கோவில் திருவிழா தொடங்குதல்

  38. சீமை எண்ணெய் - kerosene

  39. சீன்றம் - ஒழுங்கற்ற புதர்

  40. சுத்திப் போடு - திருஷ்டி கழித்தல்

  41. சுளுக்கு - நரம்புப் பெயர்ச்சி

  42. செருவு - கவலை

  43. தட்டுவாணி - பொறுப்பற்றவன்

  44. தெய்யக்கடை - தையல் கடை

  45. தண்டுவன் - திருமணமாகாதவன்

  46. தாட்டி - தடவை

  47. திடுமுட்டி - ஊருக்குச் செய்தி சொல்பவன்

  48. தொப்பை - வயிறு, புளியம்பழத்தோல்

  49. நவுத்து - நகர்த்து

  50. நொள்ளிக்கண் - குருட்டுக்கண்

  51. நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்

  52. நஞ்ச சோறு - பழைய நைந்த சோறு

  53. நீர்ச்சீலை - கோவணம்

  54. நெட்டை - விரல்களை பின்னால் மடக்கினால் உண்டாகும் ஒசை

  55. நெலவு - கதவு

  56. பம்புதல் - பதுங்குதல்

  57. பெருக்கான் - பெருச்சாளி

  58. மேக்காலே - மேற்குப்பக்கத்தில்

  59. மச்சாண்டாரு - கணவனின் அண்ணன்

  60. மகுடம் - கண்ணில் விழும் திரை

  61. முகாமி - தானாவதி , முன்நின்று செய்பவர்

  62. மேவு - ஆடுமாடு மேய்ச்சலுக்கு வைக்கப்படும் புல்

  63. மோளி - அழுக்கு துணியை அளவைக் குறிக்கும் சொல்

  64. லோலாக்கு - காதணி

  65. வைரி - விரோதி

  66. மிந்தி - முன்னால்

  67. மொல்ல - மெதுவாக

  68. ஒசரத்து - உயரத்தில்

  69. பொழங்குவது - பயன் படுத்துவது

  70. வெய்வது - திட்டுவது

  71. கம்மியாக - குறைவாக

  72. பொறவால‌ - பின்னாலே

  73. சேந்துவது - தண்ணீர் இறைப்பது

  74. கொன்னி - திக்கி

  75. பினாத்தல் - உளறல்

  76. அடப்பு - வழியை தடுப்பது அதுவும் தண்ணீர் செல்வதை

  77. அடிப்பிடிக்கும் - தண்ணீர் இல்லாததால் பானையில் அரிசி பிடித்துக் கொள்வது

  78. அண்ணாந்துப் பாரு - மேலே பாரு

  79. அண்ணாந்துக் குடி - வாயில் படாமல் குடித்தல்

  80. அணாமத்து - யாரும் சொந்தமில்லாதது

  81. அத்துபடி - அனைத்தும் தெரிந்த நிலை

  82. அத்துரு - அறுத்து விடு

  83. அதட்டுவது - மிரட்டுவது, கண்டிப்பது

  84. அதாச்சா - அது முடிந்து விட்டதா

  85. அதுக்குள்ளேயா - உடனடியாகவா

  86. அந்திருச்சு - அறுந்து விட்டது

  87. அரப்பு - தலைக்கு போட்டு குளிக்கும் பொருள

  88. அரக்கப்பரக்க - சரியாகச் செய்யாமல்

  89. அல்லாரும் - அனைவரும்

  90. ஆத்திர அவசரத்துக்கு - தேவைப்படும் நேரத்தில்

  91. ஆயிருச்சி - முடிந்து விட்டது

  92. ஆற அமர - மெதுவாக

  93. மை கோதி - தலை கோதுவது

  94. வாக்கணம் - தாளிப்பதறகும் காய்ச்சுவதற்கும் பயன்படுத்துவது

  95. ஒத்தாசை - உதவி

  96. கடவாய் - வாயின் ஒரப்பகுதி

  97. கண்டமேனிக்கு - கண்ட படி

  98. கழஞ்சு - அரிசியை நீரில் கழுவுவது

  99. காணாதை - பார்க்காதை

  100. வெயில் தாழ -வெயில் குறைவாக இருக்கும்பொழது

  101. .அக்கியானம் - தொல்லை, தொந்தரவு

  102. அச்சாணியம் - அபச குணம்

  103. அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால்

  104. ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள்

  105. அம்பிலி - சோளக்கூழ்

  106. இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி

  107. இத்தாச்சோடு - மிகப்பெரிய

  108. ஊடு - வீடு

  109. ஊங்காரம் - காற்றின் ஓசை

  110. .ஊசை - கொட்டுப் போனது

  111. .ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு

  112. எசிரி - போட்டி

  113. எடங்காடு - insufficient space

  114. எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர்

  115. ஏகடியம் - கேலி, கிண்டல்

  116. ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர்

  117. ஒரப்பு - குண்டாகு

  118. ஒரம்பு - ஈரநிலம்

  119. ஒடம்பு - உடம்பு

  120. ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல்

  121. ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர்

  122. கடும்பு - சதை போடுதல்

  123. கரடு - சிறு குன்று

  124. குண்டு - இரைப்பை

  125. கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி

  126. சிலுப்புதல் - தயிர் கடைதல்

  127. தொணெ - துணை

  128. .அந்தப்பொறம் - அந்தப்பக்கம்

  129. அந்தான்டே - அந்தப்பக்கம்

  130. அள்ளையில் - பக்கத்தில்

  131. இன்னிக்கு - இன்றைக்கு

  132. உச்சாணி - உச்சி

  133. உம்மை - உண்மை

  134. ஓசனை - யோசனை

  135. ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல்

  136. கண்ணாலம் - திருமணம்

  137. கமுத்தி - கவிழ்த்தி

  138. குக்கு - உட்கார்

  139. குறுக்காட்டி - வழி மறித்தல்

  140. கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை

  141. தொறப்புக்கை - திறவுக்கோல்

  142. தோண்டி - குடம்

  143. காத்தாலை - விடியற் காலை

  144. கிச்சு - அக்குள்

  145. சாங்கியம் - சடங்கு

  146. செலவாந்தரம் - பழமொழி

  147. தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன்

  148. தடுக்கு - ஒலையில் செய்த கீற்று

  149. பம்பாதே - பதுங்காதே

  150. பிப்பு - அரிப்பு எடுத்தல்

  151. முச்சி - முறம்

  152. மசையன் - விவரமற்றவன்

  153. மப்பு - போதை, மங்கல்

  154. வக்கு - வசதி

  155. வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம்

  156. உப்புசம் - புழுக்கம்

  157. வளுசல் - சிறுவன்

  158. சொள்ளை - கொசு

  159. தப்பரது - துணி துவைத்தல்

  160. கொமரி - வயசுப் பெண்

  161. ஆசாரம் - வீட்டின் மையப்பகுதி ( Hall )

  162. மேப்படி - கதவின் மேலுள்ள பகுதி ( loft )

  163. மொனவாத - முணுமுணுக்காத

  164. மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது.

  165. சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான் நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :)

  166. மம்மானையா - மென்மேலும்

  167. இண்டம் புடிச்சவன் - கஞ்சன்

  168. பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற?

  169. மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன்.

  170. சுளுவா - சுலபமாக

  171. வெட்ருப்பு - கடுகடுப்பு அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா.

  172. . சிலுவாடு - சிறு சேமிப்பு உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு.

  173. . தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி

  174. மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா.

  175. டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா.

  176. வெறுமானம் - அமாவாசைக்கும் மூன்றாம் பிறைக்கும் இடைப்பட்ட நாள். வெறும் வானம். அமாவாசையை, நெறஞ்ச அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். வெறுமானம் அன்று எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

  177. புண்ணியார்ச்சனை - புதுமனை புகுவிழா

  178. கருப்பு - கருமாதி

  179. அடப்பு - இறந்த நேரத்தை ஜோஸியர்களிடம் கொடுத்துப் பார்ப்பார்கள். சில குறிப்பிட்ட நேரத்தில் இறந்திருந்தால், சில தினங்களுக்கு அடப்பு வைக்க வேண்டும் என்று சொல்வார். அந்த நாட்களுக்கு தொடர்ச்சியாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மனைவி இருந்தால் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து இருப்பார். இன்னு ம் பல சடங்குகளும் இருக்கும்.

  180. ஒளப்பிக்காத - குழப்பிக்காத.கண்ட கண்டதுக்கெல்லாம் மனசப் போட்டு ஒளப்பிக்காத. நடக்குற போது பாத்துக்கலாம்.

  181. மதுக்கான் - சுறுசுறுப்பற்றவன்

  182. சோப்பலாங்கி - சோம்பேறி/ சுணங்கி இருப்பவன்

  183. நோக்காடு - நோய் அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.

  184. கதுமை - கூர்மை கத்தி பயங்கரக் கதுமை.

  185. கட்டுச்சோறு - புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வகையறா.பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து அல்லது ஏழு வகையான சோறு செய்து விருந்து(வளை காப்பு) நடக்கும். அவ்விருந்தின் பெயரே கட்டுச் சோத்து விருந்துதான்.

  186. பலகாரம் - பெயரில் காரம் மட்டும் இருந்தாலும் பலவகையான இனிப்பும், காரமும் கலந்த கலவை.

  187. ஒடக்கா - ஓணான்

  188. தவுட்டு பலாக்கா - சீதாப்பழம்

  189. அழுகுவண்ணாங்குருவி - மைனாஅழகு வண்ணக் குருவி தான் அழுகுவண்ணாங்குருவி ஆகிவிட்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

  190. தோப்பட்டை - பெரியது உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.

  191. சால் - தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம். அண்டா மாதிரியும் இல்லாமல், குடத்தை விட சற்றே பெரியதாக இருக்கும்.

  192. நாளாண்ணிக்கு - நாளை மறுநாள்.

  193. சோமாரம் - திங்கட்கிழமை.

  194. வாதிக்காத - வதைக்காதே.

  195. வங்கு - பொந்து, சந்து

  196. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

  197. உருமாளை - தலைப்பாகை

  198. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

  199. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

  200. அவுசாரி - விபச்சாரி

  201. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

  202. மிஞ்சி - மெட்டி

  203. பொல்லி - பொய்.

  204. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

  205. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

  206. வேச காலம் - கோடை காலம்

  207. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

  208. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

  209. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

  210. மொகற கட்ட - முகம்

  211. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

  212. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

  213. பொடனி - தலையின் பின்புறம்

  214. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

  215. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட கிலோகிராம் வரும்)

  216. அலும்பு - அலம்பல்.

  217. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

  218. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

  219. அட்டாரி - பரண்.

  220. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.

  221. மக்காநாளு - அடுத்த நாள்

  222. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

  223. அன்னாடும்- தினமும்

  224. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

  225. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

  226. அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

  227. தாரை - பாதை. எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

  228. மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.

  229. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.

  230. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன். உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.

  231. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.

  232. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.

  233. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.

  234. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை) நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  235. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.

  236. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)

  237. . அங்கராக்கு - சட்டை

  238. . பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)

  239. செம்பூத்து - செண்பகப் பறவை

  240. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.

  241. புறடை - புரூடா (பொய்)அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.

  242. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.

  243. சாவுகாசம் - சகவாசம்

  244. ரவைக்கு - இரவுக்குசொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.

  245. போத்தாலை - புகையிலை.

  246. கொழுந்தனார் - கணவனின் தம்பி

  247. கொழுந்தியா - மனைவியின் தங்கை

  248. நங்கையா - மனைவியின் அக்கா.

  249. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

  250. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.

  251. தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)

  252. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?

  253. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.

  254. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)குழந்தை நலங்கி போச்சு

  255. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.

  256. மோடம், கருக்கல் - மேகம்

  257. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)

  258. சடஞ்சு - சோர்வடைந்துமனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?

  259. நேக்கு - கவனமாக,சரியாகநேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு

  260. எச்சா - அதிகமாக. சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.

  261. நேசர் பாரு - உளவு, உண்மை நிலைஎதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ

  262. பூலவாக்கு -உண்மை நிலை.டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?

  263. பண்டம் பாடி - கால்நடைகள்

  264. பீத்து - பெருமைஅவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.

  265. பீத்தை - பழையஅந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.

  266. சீக்கு- நோய்

  267. பிலுக்கு - பந்தா.அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.

  268. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து
    கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.

  269. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரிஎன்ன பாப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?

  270. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.

  271. பொட்டாட்டமா இருத்தல் - அமைதியாய் இருத்தல்.

  272. ஒருசந்தி இருத்தல் - ஒரு பொழுது இருத்தல்(ஒக்க பொத்து உண்டேதி)

  273. பட்டண ரவை - வெள்ளை ரவை(அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது)

  274. கோசாப்பழம் - தர்பூசணி

  275. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

  276. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

  277. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

  278. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

  279. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

  280. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)

  281. வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

  282. என்றது - என்னுடையது.

  283. உன்றது - உன்னுடையது.

  284. அப்பச்சி- தாய்வழி தாத்தா

  285. . அப்பாரு- தந்தை வழி தாத்தா.

  286. . அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

  287. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

  288. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

  289. நடவை - வெளிப்புறக் கதவு

  290. வட்டல்- தட்டு

  291. நருவசா- முழுவதுமாக

  292. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

  293. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

  294. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

  295. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

  296. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

  297. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

  298. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

  299. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

  300. அவத்தைக்கு - அங்கே

  301. இவத்தைக்கு - இங்கே

  302. சலவாதி - மலம்.

  303. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

  304. போசி- பாத்திரம்

  305. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

  306. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

  307. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

  308. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

  309. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

  310. , கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

  311. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

  312. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

  313. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)

  314. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

  315. சீவக்கட்டை- விளக்குமாறு

  316. கூமாச்சி- கூர்மையாக

  317. தொறப்பு - பூட்டு

  318. தொறப்புக் குச்சி - சாவி

  319. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

  320. மொடக்கடி - மொடக்கடி பண்ணாதே - இடக்காகச் செய்யாதே

  321. ரவுசு - ரகளை என்று பொருள் படும் சொல்

  322. பண்ணாடி -- கணவர்

  323. பண்ணாட்டு -- ruling , power / வெட்டிப் பண்ணாட்டு -- useless show of power

  324. வெருசா -- சீக்கிரமாய்

  325. சாளை (லை) --- farmhouse usually in the middle of the farm

  326. நடுவலவன் -- brother in between

  327. பண்ணாமை (பண்ணாம) - நிலத்தில் பயிரிட்டிருப்பது.

  328. மறுக்கா - மறுபடியும்.

  329. ஒறம்பற - உறவின் முறை

  330. சீசா - பாட்டில்

  331. எத்தாசோடு - எவ்வளவு பெரிசு

  332. நங்கையா - நாத்தனார்

  333. பொடனி - பின்கழுத்து

  334. நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) - பண்டிகை

  335. எசகடம் = நேர்த்திக்கடன்

  336. அக்கப்போர் -- தொந்தரவு / pestering

  337. திருவாத்தான் -- கோமாளி / Jocker

  338. குரவளை - தொண்டை

  339. எச்சு - அதிகம்

  340. முக்கு - முனை