ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
யார் அடிச்சு நீ அழறே உன் அஞ்சன கண் மை கரைய
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
மாமா அடிச்சாரோ மல்லிகப்பூ செண்டாலே
தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாளோ பால் புகட்டும் கையாலே
அந்த பாட்டியா அடிச்சாளோ உன்னை பத்துவிரலாலே
யாரடிச்சு நீ அழறே கண்ணே நீ கண்ணுறங்கு
யாரடிச்ச கண்ணீரு ஆறாய் பெருகிறது
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
---------------------------------------------
கண்ணே உறங்குறங்கு, என் கண்மணியே நீயுறங்கு
பொன்னே உறங்குறங்கு, என் பூங்கிளியே நீயுறங்கு
கண்ணை அடித்தார் யார், எந்தன் கண்மணியை தொட்டார் யார்?
பொன்னை அடித்தார் யார், என் பூங்கிளியை தொட்டார் யார்...
யாரடித்த கண்ணீரு ஆறாய் பெருகியது
எவரடித்த கண்ணீரு குளமாய் தேங்கியது
மாமன் அடித்தானோ மலர்கொண்ட செண்டாலே
மாமி அடித்தாளோ மலர் தளிர் கரத்தாலே
பாட்டி அடித்தாளோ பால் புகட்டும் சங்காலே
சித்தி அடித்தாளோ சின்னஞ் சிறு விரலாலே

No comments:
Post a Comment