skip to main |
skip to sidebar
எங்க ஊரு பாசை இதுதாங்கோ....
- அவியொ - அவர்கள்
- உங்குனாலே - உங்களாலே
- அட்டி - கழுத்தில் அணியும் அணி
- அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு
- அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை
- அதிக்களம் - ஆணவம்
- அல்லை - இடுப்பு
- எரப்பாணி - இரந்து உண்ணுபவன்
- எருக்காலி - பயந்து நடுங்குவன்
- ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம்
- ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம்
- ஒடை அடித்தல் - காயடித்தல்
- ஒவை - மரக்கிளையை அசைத்தல்
- ஓடை - மேட்டு நிலம்
- ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி
- கடக்கால் - அடித்தளம்
- கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம்
- கோயல் - கோவில்
- கச்சல் - குழப்பம், நைந்து விடுதல்
- கடையாணி - அச்சாணி
- கந்தர கோலம் - அலங்கோலம்
- கருமாந்திரம் - திட்டும் சொல்
- கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி
- குக்கல் - நாய்
- காந்து - வெயிலின் மிகு வெப்பம்
- கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு
- கூச்சம் - மரத்தூண்
- கெடாரி - மாடு
- கெடை - ஓரிடத்தில் அதிக நேரம் அல்லது நாட்கள் இருப்பது
- கொட்டமுத்து - விளக்கெண்ணெய்
- கொட்டு முழக்கு - மேள தாளம்
- சித்தை - சிறிது நேரம்
- சூரி - கூரிய நீண்ட மடக்குக் கத்தி
- சீலெ - சேலை
- சங்கடை - குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கு
- சப்படை - தட்டை வடிவம்
- சாமி சாட்டு - கோவில் திருவிழா தொடங்குதல்
- சீமை எண்ணெய் - kerosene
- சீன்றம் - ஒழுங்கற்ற புதர்
- சுத்திப் போடு - திருஷ்டி கழித்தல்
- சுளுக்கு - நரம்புப் பெயர்ச்சி
- செருவு - கவலை
- தட்டுவாணி - பொறுப்பற்றவன்
- தெய்யக்கடை - தையல் கடை
- தண்டுவன் - திருமணமாகாதவன்
- தாட்டி - தடவை
- திடுமுட்டி - ஊருக்குச் செய்தி சொல்பவன்
- தொப்பை - வயிறு, புளியம்பழத்தோல்
- நவுத்து - நகர்த்து
- நொள்ளிக்கண் - குருட்டுக்கண்
- நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
- நஞ்ச சோறு - பழைய நைந்த சோறு
- நீர்ச்சீலை - கோவணம்
- நெட்டை - விரல்களை பின்னால் மடக்கினால் உண்டாகும் ஒசை
- நெலவு - கதவு
- பம்புதல் - பதுங்குதல்
- பெருக்கான் - பெருச்சாளி
- மேக்காலே - மேற்குப்பக்கத்தில்
- மச்சாண்டாரு - கணவனின் அண்ணன்
- மகுடம் - கண்ணில் விழும் திரை
- முகாமி - தானாவதி , முன்நின்று செய்பவர்
- மேவு - ஆடுமாடு மேய்ச்சலுக்கு வைக்கப்படும் புல்
- மோளி - அழுக்கு துணியை அளவைக் குறிக்கும் சொல்
- லோலாக்கு - காதணி
- வைரி - விரோதி
- மிந்தி - முன்னால்
- மொல்ல - மெதுவாக
- ஒசரத்து - உயரத்தில்
- பொழங்குவது - பயன் படுத்துவது
- வெய்வது - திட்டுவது
- கம்மியாக - குறைவாக
- பொறவால - பின்னாலே
- சேந்துவது - தண்ணீர் இறைப்பது
- கொன்னி - திக்கி
- பினாத்தல் - உளறல்
- அடப்பு - வழியை தடுப்பது அதுவும் தண்ணீர் செல்வதை
- அடிப்பிடிக்கும் - தண்ணீர் இல்லாததால் பானையில் அரிசி பிடித்துக் கொள்வது
- அண்ணாந்துப் பாரு - மேலே பாரு
- அண்ணாந்துக் குடி - வாயில் படாமல் குடித்தல்
- அணாமத்து - யாரும் சொந்தமில்லாதது
- அத்துபடி - அனைத்தும் தெரிந்த நிலை
- அத்துரு - அறுத்து விடு
- அதட்டுவது - மிரட்டுவது, கண்டிப்பது
- அதாச்சா - அது முடிந்து விட்டதா
- அதுக்குள்ளேயா - உடனடியாகவா
- அந்திருச்சு - அறுந்து விட்டது
- அரப்பு - தலைக்கு போட்டு குளிக்கும் பொருள
- அரக்கப்பரக்க - சரியாகச் செய்யாமல்
- அல்லாரும் - அனைவரும்
- ஆத்திர அவசரத்துக்கு - தேவைப்படும் நேரத்தில்
- ஆயிருச்சி - முடிந்து விட்டது
- ஆற அமர - மெதுவாக
- மை கோதி - தலை கோதுவது
- வாக்கணம் - தாளிப்பதறகும் காய்ச்சுவதற்கும் பயன்படுத்துவது
- ஒத்தாசை - உதவி
- கடவாய் - வாயின் ஒரப்பகுதி
- கண்டமேனிக்கு - கண்ட படி
- கழஞ்சு - அரிசியை நீரில் கழுவுவது
- காணாதை - பார்க்காதை
- வெயில் தாழ -வெயில் குறைவாக இருக்கும்பொழது
- .அக்கியானம் - தொல்லை, தொந்தரவு
- அச்சாணியம் - அபச குணம்
- அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால்
- ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள்
- அம்பிலி - சோளக்கூழ்
- இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி
- இத்தாச்சோடு - மிகப்பெரிய
- ஊடு - வீடு
- ஊங்காரம் - காற்றின் ஓசை
- .ஊசை - கொட்டுப் போனது
- .ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
- எசிரி - போட்டி
- எடங்காடு - insufficient space
- எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர்
- ஏகடியம் - கேலி, கிண்டல்
- ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர்
- ஒரப்பு - குண்டாகு
- ஒரம்பு - ஈரநிலம்
- ஒடம்பு - உடம்பு
- ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல்
- ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர்
- கடும்பு - சதை போடுதல்
- கரடு - சிறு குன்று
- குண்டு - இரைப்பை
- கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி
- சிலுப்புதல் - தயிர் கடைதல்
- தொணெ - துணை
- .அந்தப்பொறம் - அந்தப்பக்கம்
- அந்தான்டே - அந்தப்பக்கம்
- அள்ளையில் - பக்கத்தில்
- இன்னிக்கு - இன்றைக்கு
- உச்சாணி - உச்சி
- உம்மை - உண்மை
- ஓசனை - யோசனை
- ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல்
- கண்ணாலம் - திருமணம்
- கமுத்தி - கவிழ்த்தி
- குக்கு - உட்கார்
- குறுக்காட்டி - வழி மறித்தல்
- கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை
- தொறப்புக்கை - திறவுக்கோல்
- தோண்டி - குடம்
- காத்தாலை - விடியற் காலை
- கிச்சு - அக்குள்
- சாங்கியம் - சடங்கு
- செலவாந்தரம் - பழமொழி
- தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன்
- தடுக்கு - ஒலையில் செய்த கீற்று
- பம்பாதே - பதுங்காதே
- பிப்பு - அரிப்பு எடுத்தல்
- முச்சி - முறம்
- மசையன் - விவரமற்றவன்
- மப்பு - போதை, மங்கல்
- வக்கு - வசதி
- வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம்
- உப்புசம் - புழுக்கம்
- வளுசல் - சிறுவன்
- சொள்ளை - கொசு
- தப்பரது - துணி துவைத்தல்
- கொமரி - வயசுப் பெண்
- ஆசாரம் - வீட்டின் மையப்பகுதி ( Hall )
- மேப்படி - கதவின் மேலுள்ள பகுதி ( loft )
- மொனவாத - முணுமுணுக்காத
- மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது.
- சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான் நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :)
- மம்மானையா - மென்மேலும்
- இண்டம் புடிச்சவன் - கஞ்சன்
- பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற?
- மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன்.
- சுளுவா - சுலபமாக
- வெட்ருப்பு - கடுகடுப்பு அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா.
- . சிலுவாடு - சிறு சேமிப்பு உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு.
- . தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி
- மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா.
- டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா.
- வெறுமானம் - அமாவாசைக்கும் மூன்றாம் பிறைக்கும் இடைப்பட்ட நாள். வெறும் வானம். அமாவாசையை, நெறஞ்ச அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். வெறுமானம் அன்று எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.
- புண்ணியார்ச்சனை - புதுமனை புகுவிழா
- கருப்பு - கருமாதி
- அடப்பு - இறந்த நேரத்தை ஜோஸியர்களிடம் கொடுத்துப் பார்ப்பார்கள். சில குறிப்பிட்ட நேரத்தில் இறந்திருந்தால், சில தினங்களுக்கு அடப்பு வைக்க வேண்டும் என்று சொல்வார். அந்த நாட்களுக்கு தொடர்ச்சியாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மனைவி இருந்தால் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து இருப்பார். இன்னு ம் பல சடங்குகளும் இருக்கும்.
- ஒளப்பிக்காத - குழப்பிக்காத.கண்ட கண்டதுக்கெல்லாம் மனசப் போட்டு ஒளப்பிக்காத. நடக்குற போது பாத்துக்கலாம்.
- மதுக்கான் - சுறுசுறுப்பற்றவன்
- சோப்பலாங்கி - சோம்பேறி/ சுணங்கி இருப்பவன்
- நோக்காடு - நோய் அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.
- கதுமை - கூர்மை கத்தி பயங்கரக் கதுமை.
- கட்டுச்சோறு - புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வகையறா.பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து அல்லது ஏழு வகையான சோறு செய்து விருந்து(வளை காப்பு) நடக்கும். அவ்விருந்தின் பெயரே கட்டுச் சோத்து விருந்துதான்.
- பலகாரம் - பெயரில் காரம் மட்டும் இருந்தாலும் பலவகையான இனிப்பும், காரமும் கலந்த கலவை.
- ஒடக்கா - ஓணான்
- தவுட்டு பலாக்கா - சீதாப்பழம்
- அழுகுவண்ணாங்குருவி - மைனாஅழகு வண்ணக் குருவி தான் அழுகுவண்ணாங்குருவி ஆகிவிட்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
- தோப்பட்டை - பெரியது உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.
- சால் - தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம். அண்டா மாதிரியும் இல்லாமல், குடத்தை விட சற்றே பெரியதாக இருக்கும்.
- நாளாண்ணிக்கு - நாளை மறுநாள்.
- சோமாரம் - திங்கட்கிழமை.
- வாதிக்காத - வதைக்காதே.
- வங்கு - பொந்து, சந்து
- கம்மனாட்டி - முட்டாள், மடையன்
- உருமாளை - தலைப்பாகை
- சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.
- கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)
- அவுசாரி - விபச்சாரி
- ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
- மிஞ்சி - மெட்டி
- பொல்லி - பொய்.
- அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.
- இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.
- வேச காலம் - கோடை காலம்
- ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.
- ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?
- அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.
- மொகற கட்ட - முகம்
- செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
- அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)
- பொடனி - தலையின் பின்புறம்
- முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.
- வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட கிலோகிராம் வரும்)
- அலும்பு - அலம்பல்.
- அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.
- திலுப்பாமாரி - மேனா மினுக்கி
- அட்டாரி - பரண்.
- புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.
- மக்காநாளு - அடுத்த நாள்
- சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.
- அன்னாடும்- தினமும்
- பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்
- ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.
- அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.
- தாரை - பாதை. எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.
- மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.
- பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.
- முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன். உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.
- தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.
- பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.
- கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.
- கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை) நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
- ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.
- ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)
- . அங்கராக்கு - சட்டை
- . பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)
- செம்பூத்து - செண்பகப் பறவை
- கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.
- புறடை - புரூடா (பொய்)அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.
- தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.
- சாவுகாசம் - சகவாசம்
- ரவைக்கு - இரவுக்குசொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.
- போத்தாலை - புகையிலை.
- கொழுந்தனார் - கணவனின் தம்பி
- கொழுந்தியா - மனைவியின் தங்கை
- நங்கையா - மனைவியின் அக்கா.
- பொன்னாம்பூச்சி - பொன்வண்டு
- தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.
- தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)
- மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?
- கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.
- நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)குழந்தை நலங்கி போச்சு
- கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.
- மோடம், கருக்கல் - மேகம்
- கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)
- சடஞ்சு - சோர்வடைந்துமனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?
- நேக்கு - கவனமாக,சரியாகநேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு
- எச்சா - அதிகமாக. சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.
- நேசர் பாரு - உளவு, உண்மை நிலைஎதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ
- பூலவாக்கு -உண்மை நிலை.டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?
- பண்டம் பாடி - கால்நடைகள்
- பீத்து - பெருமைஅவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.
- பீத்தை - பழையஅந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.
- சீக்கு- நோய்
- பிலுக்கு - பந்தா.அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.
- கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து
கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.
- பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரிஎன்ன பாப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?
- தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.
- பொட்டாட்டமா இருத்தல் - அமைதியாய் இருத்தல்.
- ஒருசந்தி இருத்தல் - ஒரு பொழுது இருத்தல்(ஒக்க பொத்து உண்டேதி)
- பட்டண ரவை - வெள்ளை ரவை(அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது)
- கோசாப்பழம் - தர்பூசணி
- பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)
- கோழி கூப்பிட - அதிகாலை நேரம்
- பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)
- பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]
- அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.
- வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
- வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)
- என்றது - என்னுடையது.
- உன்றது - உன்னுடையது.
- அப்பச்சி- தாய்வழி தாத்தா
- . அப்பாரு- தந்தை வழி தாத்தா.
- . அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி
- அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி
- விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)
- நடவை - வெளிப்புறக் கதவு
- வட்டல்- தட்டு
- நருவசா- முழுவதுமாக
- ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)
- மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)
- மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)
- ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
- மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)
- எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)
- இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)
- அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)
- அவத்தைக்கு - அங்கே
- இவத்தைக்கு - இங்கே
- சலவாதி - மலம்.
- போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)
- போசி- பாத்திரம்
- அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)
- சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)
- மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்
- பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)
- வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)
- , கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)
- பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)
- பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)
- பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)
- தாவாக்கட்டை- கீழ் அன்னம்.
- சீவக்கட்டை- விளக்குமாறு
- கூமாச்சி- கூர்மையாக
- தொறப்பு - பூட்டு
- தொறப்புக் குச்சி - சாவி
- மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்
- மொடக்கடி - மொடக்கடி பண்ணாதே - இடக்காகச் செய்யாதே
- ரவுசு - ரகளை என்று பொருள் படும் சொல்
- பண்ணாடி -- கணவர்
- பண்ணாட்டு -- ruling , power / வெட்டிப் பண்ணாட்டு -- useless show of power
- வெருசா -- சீக்கிரமாய்
- சாளை (லை) --- farmhouse usually in the middle of the farm
- நடுவலவன் -- brother in between
- பண்ணாமை (பண்ணாம) - நிலத்தில் பயிரிட்டிருப்பது.
- மறுக்கா - மறுபடியும்.
- ஒறம்பற - உறவின் முறை
- சீசா - பாட்டில்
- எத்தாசோடு - எவ்வளவு பெரிசு
- நங்கையா - நாத்தனார்
- பொடனி - பின்கழுத்து
- நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) - பண்டிகை
- எசகடம் = நேர்த்திக்கடன்
- அக்கப்போர் -- தொந்தரவு / pestering
- திருவாத்தான் -- கோமாளி / Jocker
- குரவளை - தொண்டை
- எச்சு - அதிகம்
- முக்கு - முனை
No comments:
Post a Comment